இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில சினங்களில் கோவாவில் படப்பிடிப்பைத் தொடங்க இருப்பதாகவும், அதற்காக ஒரு பெரிய செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சூர்யா – சிறுத்தை சிவா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் வெளிவரும் இப்படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருப்பதை மோஷன் போஸ்டர் வழி அறிய முடிகிறது. இதில் நிறைய VFX காட்சிகள் இருப்பதாகவும், இத்திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் சிறுத்தை சிவாவின் கனவுப் படம் எனக் கூறப்படும் இப்படத்தை 2 பாகங்களாக 10 மொழிகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சென்னை, கோவா உள்ளிட்ட இடங்களில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை ECRல் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில சினங்களில் கோவாவில் படப்பிடிப்பைத் தொடங்க இருப்பதாகவும், அதற்காக ஒரு பெரிய செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சூர்யா 5 வேடங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.







