முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

ஆபாசப் பட விவகாரம்: ’சவால்களில் இருந்து தப்பிப்பேன்’- நடிகை ஷில்பா ஷெட்டி

ஆபாச பட விவகாரம் தொடர்பாக, கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி, சவால்களில் இருந்து தப்பிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் ’குஷி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். பிரபுதேவாவுடன் ’மிஸ்டர் ரோமியோ’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இவர் கணவர் ராஜ் குந்த்ரா. கடந்த 2009-ம் ஆண்டில் இவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் ஆபாசப் படங்களை தயாரித்து விற்றது தொடர்பாக, ராஜ் குந்த்ரா சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். ஆபாசப் படங்களை தயாரித்து விற்பனை செய்தது, அதற்கான பிரத்யேக செயலி உருவாக்கியதில் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்ததை அடுத்து அவர் உட்பட 11 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களின் போலீஸ் காவல் 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஷில்பா ஷெட்டிக்கும் போலீசார் சம்மன் அனுப்பி விசாரிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவருக்கு சம்மன் அனுப்பப்பட வில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்த நடிகை ஷில்பா ஷெட்டி, இப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர், கோபத்தோடு பின்னோக்கி திரும்பிப் பார்க்க வேண்டாம், அல்லது பயத்தோடு முன்னோக்கி செல்லவேண்டாம், ஆனால் சுற்றிலும் விழிப்புடன் இருங்கள்’ என்ற அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் தர்பரின் வார்த்தைகளை குறிப்பிட்டுள்ள ஷில்பா ஷெட்டி, ’எங்களை காயப்படுத்தியவர்கள், நாங்கள் உணர்ந்த ஏமாற்றங்கள், அனுபவித்த துரதிர்ஷ்டம் ஆகியவற்றின் மீதான கோபத்துடன் திரும்பிப் பார்க்கிறோம்.

நாங்கள் எங்கள் பணியை இழக்கலாம், நோய்களால் பாதிக்கப்படலாம், அல்லது வேண்டிய ஒருவரின் மரணத்தை சந்திக்கும் என்கிற அச்சத்தை எதிர்நோக்குகிறோம். கடந்த கால சவால்களில் இருந்து தப்பித்து வந்தேன். எதிர்காலத்திலும் சவால்களில் இருந்து மீண்டு வருவேன். இன்று வாழ்கிற என் வாழ்க்கையில் இருந்து என்னை திசை திருப்ப எதுவும் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்!

Hamsa

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தீபம்!!!

G SaravanaKumar

ஜெயலலிதாவுடனான சந்திப்பை நினைவு கூர்ந்த மோடி..

EZHILARASAN D