நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கும் திட்டம் ஏதும் இல்லையென மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ளது. தற்போது குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் கொரோனா 3வது அலை இந்தியாவை தாக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இப்படியான சூழலில் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை அரசு ஒத்திவைக்கும் திட்டம் ஏதும் வைத்துள்ளதா என தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுத்துப்பூர்வமாக கேள்வியெழுப்பினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதார இணை அமைச்சர் பாரதி பிரவீன், திட்டமிட்டபடி செப்.12ல் மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த தேர்வு உரிய வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெறும் என்றும், கலை அறிவியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 4,19,470 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 42.3 கோடி பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.