பிரபல பாலிவுட் நடிகையின் கணவர் ஆபாச பட வழக்கில் கைது

ஆபாச பட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவை, மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.  தட்கான், பாஷிகர், ஜான்வார் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. மிஸ்டர்…

ஆபாச பட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவை, மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். 

தட்கான், பாஷிகர், ஜான்வார் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் ஷில்பா ஷெட்டி நடித்துள்ளார். இவரது கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களைத் தயாரித்து, அதனை செல்போன் செயலி மூலம் விநியோகம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில், ராஜ் குந்த்ராவை, மும்பை குற்றப்பிரிவு போலீசார், நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக போதிய ஆதாரங்களை திரட்டியுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.