நிலவுக்கு செல்லும் முதல் பெண் இவர்தான் – நாசா வெளியிட்ட பெயர் பட்டியல்

நிலவுக்கு செல்லும் நபர்களின் பெயர் பட்டியலை நாசா வெளியிட்டுள்ளது. அதில் கிறிஸ்டினா கோச் எனும் பெண்ணும் இடம்பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக நிலவுக்கு செல்லும் 4பேர் கொண்ட பட்டியலை ஏப்ரல் 3ம் தேதி நாசா வெளியிட்டது.…

நிலவுக்கு செல்லும் நபர்களின் பெயர் பட்டியலை நாசா வெளியிட்டுள்ளது. அதில் கிறிஸ்டினா கோச் எனும் பெண்ணும் இடம்பெற்றுள்ளார்.

இரண்டாவது முறையாக நிலவுக்கு செல்லும் 4பேர் கொண்ட பட்டியலை ஏப்ரல் 3ம் தேதி நாசா வெளியிட்டது. இந்த திட்டத்திற்கு ஆர்ட்டிமிஸ் 2 என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆர்ட்டிமிஸ் 1 எனும் திட்டத்தின் மூலம் 1972ம் நிலவுக்கு மனிதர்களை நாசா அனுப்பியது. 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்டிமிஸ் 2 எனும் பெயரில் தற்போது நான்கு பேர் கொண்ட  குழுவை அனுப்புகிறது.

இந்த குழுவில் இடம்பெற்றுள்ள நபர்களின் பட்டியலை நாசா வெளியிட்டது. அதில் மூன்று ஆண்கள் ஒரு பெண் இடம்பெற்றுள்ளனர். இதில் கமாண்டராக ரீட்வைஸ்மேன் , பைலட்டாக விக்டர் க்ளோவர் , மிஷன் ஸ்பெஷலிஸ்ட் -ஆக ஜெர்மி ஹேன்சன் மற்றும்  கிறிஸ்டினா கோச்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் நிலவுக்கு செல்லும் முதல் பெண் என்ற பெருமையை கிறிஸ்டினா கோச் பெற்றுள்ளார்.

நாசாவின் ஆர்ட்டிமிஸ் 2 திட்டம்  இன்னும் 10 நாட்களில் சோதனையை தொடங்க உள்ளதாக  நாசா தெரிவித்துள்ளது.  அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் அறிவிக்கப்பட்ட நான்கு பேரும் ஆர்ட்டெமிஸ் 2 விமானம் மூலம் நிலவை  அடைவார்கள்.

இதன் முன்னேற்பாடாக செவ்வாய் கிரகத்தில்  இருந்தால் எப்படி இருக்குமோ, அதுமாதிரி உணர்வளிக்கக் கூடிய இருப்பிடத்தை  நாசா ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். இந்த  பிரத்யேக இடத்தில் 4 பேரும், ஒரு வருட காலத்துக்கு தங்க வைக்கப்படுவதாக நாசா அறிவித்துள்ளது.

யார் இந்த கிறிஸ்டினா கோச்..?

கிறிஸ்டினா கோச் மிச்சிகனில் பிறந்து வட கரோலினாவில் வளர்ந்தவர். வடக்கு கரோலினாவில் உள்ள  ஸ்கூல் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேத்ஸ்-ல்  பட்டம் பெற்றார். இதன் பின்னர் ராலேயில் உள்ள வட கரோலினா பல்கலைகழகத்தில் சேர்ந்து அதில்  எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மற்றும் இயற்பியல் ஆகிய துறைகளில்  இரண்டு இளங்கலை அறிவியல் பட்டங்களை பெற்றார்.

மேலும் கடந்த 2022 ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் துறையில்  முதுகலை அறிவியல் பட்டத்தையும் பெற்றார். கல்வியில் அவரின் ஈடுபாடு மற்றும் பாடத்திட்டத்தில் அவருக்கு இருந்த புலமை காரணமாக தான் பயின்ற நார்த் கரோலினா பல்கலைகழகத்தில் அறிவியல் துறைக்கான கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.

கடந்த  2013 ஆம் ஆண்டின் நாசா வின்வெளி மையத்தில் விண்வெளி வீரராக தேர்வானார்.  கிறிஸ்டினோ கோச் மற்றும் அவரது பணியாளர்கள் உயிரியல், புவி அறிவியல், மனித ஆராய்ச்சி, இயற்பியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான சோதனைகளுக்கு பங்களித்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.