முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ஐ.நா.,வில் இணைச் செயலாளராக பணியாற்றிய சசிதரூர், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் சிறந்த எழுத்தாளரும் கூட. ஆங்கிலத்தில் நாவல்கள் உட்பட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள சசிதரூர், செய்தித்தாள்களில் வரும் கார்ட்டூன்களை மிகவும் ரசிப்பவர். அந்தவகையில், தற்போது அவரை பற்றிய மீம்ஸ்கள் அவரையே ரசிக்கச் செய்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சசிதரூர் சமீபத்தில் கேரளாவில் உள்ள தனது பூர்வீக ஊருக்குச் சென்றபோது எடுத்த புகைப்படம், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துவிட்டது. ஓணம் திருவிழாவையொட்டி, கேரளாவில் பாலக்காடு அருகேயுள்ள கோயில் ஒன்றில், தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார் சசிதரூர். மஞ்சள் நிற குர்தாவுடன் வேட்டி துண்டு அணிந்தபடி, அவர் தேங்காய் உடைத்த புகைப்படத்தை வைத்து, தற்போது ஏராளமான மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
Credits to the editor for showing @ShashiTharoor a powerful muscular man. pic.twitter.com/k2ACadTmg7
— Akul Jaiswal (@akul_jaiswal) August 24, 2021
மல்யுத்தப் போட்டியில் சக வீரரை தேங்காயால் தாக்குவது, டீக்கடையில் வேலை பார்ப்பது, கிரிக்கெட் மைதானத்தில் பந்துவீசுவது போன்று மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு வைரலாகி வருகின்றன. மேலும், துணி துவைப்பது, ஹாலிவுட் படத்தில் வில்லனை தாக்குவது, பரதநாட்டியம் ஆடுவது, ஒலிம்பிக்கில் குண்டு எறிவது, தேங்காயுடன் சிலையாக நிற்பது, போன்ற மீம்ஸ் புகைப்படங்களும், சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்படுகின்றன.
தன்னைப் பற்றிய மீம்ஸ்களை மிகவும் ரசித்த சசிதரூர், அவற்றை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் முதல்முறையாக ஒரு லட்சம் ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்தியர், சசிதரூர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ட்விட்டரில் பகிர்ந்த அவரது மீம்ஸ்கள், நெட்டிசன்களை சிரிப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
and it’s pouring now.. pic.twitter.com/2gagFVWuQj
— ab20 (@ab160620) August 25, 2021