மன உளைச்சலால் நாக்கை அறுத்துக் கொண்ட நபர்

ஒசூரில் மன உளைச்சலால் கட்டட தொழிலாளி நாக்கை கத்தியால் வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒசூர் வசந்த் நகரை சேர்ந்தவர் முருகேசன். கட்டட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள், மகன்…

ஒசூரில் மன உளைச்சலால் கட்டட தொழிலாளி நாக்கை கத்தியால் வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூர் வசந்த் நகரை சேர்ந்தவர் முருகேசன். கட்டட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். சமீப நாட்களாக மன உளைச்சலில் இருந்த இவர் யாருடனும் பேசாமல் தனியாக இருந்து வந்துள்ளார், இந்நிலையில்,  இன்று காலை திடீரென அவர் தனது நாக்கை வெட்டிகொண்டதாக கூறப்படுகிறது. இதில், அவரது நாக்கு துண்டாகி கீழே விழுந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மகளும், மனைவியும் உடனடியாக அவரது நாக்கை எடுத்துக் கொண்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நாக்கில் ரத்த ஓட்டம் இல்லாததால் இனி நாக்கை ஒட்ட வைக்க முடியாது என தெரிவித்துவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.