கேரள எல்லையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழ்நாடு, மற்றும் கர்நாடகாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுருத்தியுள்ளார். இந்தியாவில், கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், கேரளாவில்…

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழ்நாடு, மற்றும் கர்நாடகாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுருத்தியுள்ளார்.

இந்தியாவில், கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பில், கேரள மாநிலத்தில் இருந்து மட்டுமே 60 சதவீத பாதிப்புகள் பதிவாகின்றன. இந்நிலையில் இன்று, கொரோனா நிலவரம் தொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் ஆகியோருடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழ்நாடு, கர்நாடக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தவும், எல்லைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுருத்தினார். கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்குமாறும் அவர் அறிவுருத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.