வனத்துறையிடம் பிடிப்பட்ட காட்டு யானை சங்கர், கும்கியாக மாற்றப்பட்டதையடுத்து நான்கு மாதங்களுக்கு பிறகு மரக்கூண்டிலிருந்து வெளியே வந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர், சேரம்பாடி அருகே உள்ள கொளப்பள்ளி பகுதியில் தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று பேரை தாக்கி கொன்ற காட்டு யானை சங்கர், கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு. மரக்கூண்டில் காட்டு யானை சங்கர் அடைக்கப்பட்டது. யானையின் பாரமாரிப்பிற்காக விக்ரம் என்ற பாகன், மற்றும் உதவியாளர் சோமன் ஆகியோர் நியமிக்கப்பட்டு அதனிடம் நெருங்கி பழகி வந்தனர்.
தற்போது பாகனின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து செயல்பட தொடங்கியதால், அதனை மற்ற கும்கி யானைகளுடன் சேர்ந்து பழகுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக யானை சங்கர், மரக் கூண்டிலிருந்து நேற்று வெளியே கொண்டு வரப்பட்டது.







