அமமுகவிலிருந்து வருபவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அமமுகவிலிருந்து வருபவர்களை சிவப்பு கம்பளம் விரித்து அதிமுக தொண்டர்கள் வரவேற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோயில் வளாகத்தில், மதுரை மேற்கு மாவட்ட…

அமமுகவிலிருந்து வருபவர்களை சிவப்பு கம்பளம் விரித்து அதிமுக தொண்டர்கள் வரவேற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோயில் வளாகத்தில், மதுரை மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமமுகவில் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்துவந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன், திமுகவில் சேர்ந்தது குறித்து விமர்சனம் செய்தார்.

இவரைப்போன்று அங்கிருந்து பலரும் விலகிட உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அதிமுகவில் சேருவதற்காக வந்தால் அவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.