சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றார் ஷாருக்கான்..!

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை ஷாருக்கான் பெற்றுக்கொண்டார். 

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் தேசிய விருதுகள் பெற்ற கலைஞர்களுக்கு குடியசுத்தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வருகிறார்.  இதில், ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை ஷாருக் கான் பெற்றுக்கொண்டார்.

ஷாருக்கன் -அட்லீ காம்போவில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படம் ஜாவான். இப்படத்தில் நயன்தாரா,விஜய்சேதுபதி,தீபிகா படுகோனே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பான் இந்தியா படமாக வெளியான இப்படம் உலக அள்வில் 1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து அசத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.