முக்கியச் செய்திகள் இந்தியா

சிறைக்கு சென்று மகனை சந்தித்தார் ஷாருக்கான்

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிறையில் உள்ள தனது மகனை சந்தித்தார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை விருந்து நடப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேரை அக்.3ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கிடையே ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இதில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. இந்நிலையில் தனது மகனை இன்று மும்பை ஆர்தர் சாலை சிறைசாலையில் நேரில் சென்று சந்தித்தார் நடிகர் ஷாருக்கான்.

ஏற்கெனவே ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆர்யன்கானுடன் வீடியோ காலில் கலந்துரையாடியிருந்தனர். தற்போது மகாராஷ்டிரா அரசு சிறைக்கைதிகளை சந்திக்க அனுமதியளித்ததையடுத்து ஷாருக்கான் நேரில் தனது மகனை சந்தித்துள்ளார். முன்னதாக கொரோனா தொற்று காரணமாக சிறைக்கைதிகளை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மும்பையிடம் போராடி வென்றது டெல்லி கேபிடல்ஸ்

G SaravanaKumar

’மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது…’ புனித் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

Halley Karthik

கீழடியில் ஒரே குழியில் 7 மனித எலும்புக் கூடுகள்!

Halley Karthik