முக்கியச் செய்திகள் உலகம்

ஆப்கன் மக்களுக்கு உதவ இந்தியா தயார்; தலிபான்

ஆப்கன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு அரசு படைக்கும் தலிபான் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க படைகள், விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து, ஆப்கானை தலிபான்கள் எளிதாக கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து அங்கு தலிபான்கள் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்டது. இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஆப்கானிஸ்தான் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில் இந்தியா சார்பில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஜே. பி. சிங்  கலந்து கொண்டார். அப்போது ஆப்கானிஸ்தான் மோசமான சூழ்நிலையில் உள்ளது என ஜே பி சிங் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றும் அதற்கான வாக்குறுதியை இந்தியா அளித்துள்ளது என்றும் தலிபான் செய்தித் தொடர்பாளர்  சபிஹுல்லா முஜாஹித் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக நிர்வாகிகள் தற்காலிக நீக்கம்-பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி அறிவிப்பு

Saravana Kumar

“ஜனவரி 18ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்கள் 100% செயல்படும்” – சென்னை உயர்நீதிமன்றம்

Jeba Arul Robinson

நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்தவர் கொலை: 3 பேர் கைது

Web Editor