முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

நீண்ட நாள் கனவு நிறைவேறியது: சமந்தா நெகிழ்ச்சி!

நீண்ட நாள் கனவு நிறையேறியது என்று ‘ஷகுந்தலம்’ பட வாய்ப்பு குறித்து சமந்தா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் காளிதாசர் எழுதிய சமஸ்கிருத நாடகம் ‘அபிஜன ஷகுந்தலம்’. இதில் ஷகுந்தலம் கதாபாத்திரத்தை வைத்து இயக்குநர் குணசேகர் புராணத் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். தில் ராஜு மற்றும் குணா டீம் வொர்க்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘ஷகுந்தலம்’ எனத் தலைப்பிடப்பட்டு, பணிகள் தொடங்கியுள்ளது .

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் ஷகுந்தலம் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். அவருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க தேவ் மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பூஜை நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக அல்லு அரவிந்த் கலந்துகொண்டார்.

‘ஷகுந்தலம்’ படப்பூஜை முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் சமந்தா பேசியதாவது, “50 திரைப்படங்களால் ஆன இந்தப் பயணத்தில், நான் பல வகையான திரைப்படங்களில், பல வகையான பாத்திரங்களில் நடித்துள்ளேன். ‘தி பேமிலி மேன்’-ல் ஆக்‌ஷன் கூட முயற்சி செய்தேன். வில்லியாகவும் நடித்துள்ளேன். ஆனால், ஒரு வரலாற்றுத் திரைப்படத்திலோ அல்லது ஒரு இளவரசியாகவோ நடிப்பதுதான் எப்போதும் என்னுடைய கனவாக இருந்தது.

சினிமா துறையின் 10 ஆண்டுகளில், இன்றுதான் நான் நீண்ட நாள் கனவு கண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்படத்தில் என்னுடைய 100 சதவீத உழைப்பைக் கொடுப்பேன் என்று நம்புகிறேன். அதைத்தான் குணா சாரும் விரும்புகிறார். இவ்வளவு நுணுக்கமான ஒரு கதையை நான் கேட்டதே இல்லை. படத்தைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. படத்தைப் பற்றிய அனைத்தும் இயக்குநரின் சிந்தனையில் உள்ளன. எனவே, இப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குநரின் கற்பனையை நிஜமாக்க விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடிகை மீரா மிதுன் ஜாமீன் வழக்கு 23 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு

Gayathri Venkatesan

மாவட்டங்கள் தோறும் புத்தக கண்காட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Arivazhagan Chinnasamy

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது; பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

G SaravanaKumar