ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழக வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சாந்தி சவுந்தரராஜன். இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.
இத்திரைப்படத்தை இயக்குநர் ஜெயசீலன் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்க ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்கிறார். இத்திரைப்படத்தின் படபிடிப்பு புதுக்கோட்டையில் உள்ள சாந்தி சவுந்த்ரராஜனின் கிராமத்தில் தொடங்குகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இத்திரைப்படம் தொடர்பாக இயக்குநர் பேசுகையில்,’தடகள வீரர்கள் தங்களது இளமையின் முக்கிய காலங்களை தடகளத்தில் கழிக்கின்றனர். ஒரு வீரர் பதக்கம் வெல்வதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் பயிற்சி செய்ய வேண்டியிருக்கும். அப்படி பயிற்சி செய்து பதக்கம் பெற்ற சாந்தி சவுந்தரராஜனின் வாழ்வில் எதிர்பராத திருப்பங்கள் நிகழ்ந்துள்ளது. இத்திருப்பங்களே என்னை இத்திரைப்படத்தை இயக்கவைத்தது’என்றார்.
2006ம் ஆண்டு தோஹா போட்டிகளில் கலந்துகொண்ட சாந்தி சவுந்தரராஜன் வெள்ளி பதக்கம் வென்றார். இதனைத்தொடர்ந்து பாலினம் தொடர்பான எழுந்த சர்ச்சையில் அவரது பதக்கம் பறிக்கப்பட்டது.