முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

கோல்டன் விசா பெறுவதற்காக துபாய் சென்றார் மம்மூட்டி

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ள கோல்டன் விசாவை பெறுவதற்காக நடிகர் மம்மூட்டி துபாய் சென்றுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சார்பில் வழங்கப்படும் கோல்டன் விசா, 10 வருடம் செல்லத் தக்கதாகும். தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்த விசாவை அந்நாட்டு அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தின் குடிமக்களுக்கு இணையாகக் கருதப்படுவது வழக்கம்.

பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் இந்த கோல்டன் விசாவை ஏற்கனவே பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவரான நஸ்ரின் பேகம் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த விசா வழங்கப்பட்டது.

இந்நிலையில், பிரபல நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு இந்த கோல்டன் விசாவை, ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி கவுரவித்துள்ளது. மலையாள நடிகர்களுக்கு இந்த விசா வழங்கப்படுவது இதுதான் முதன்முறை. இந்நிலையில் இந்த விசாவை பெறுவதற்காக நடிகர் மம்மூட்டி, துபாய் சென்றுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

மத்திய அரசு நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குகிறது கெய்ர்ன்?

Halley karthi

முதலமைச்சர் நிவாரண நிதி: ஒரு மாத ஊதியத்தை அனுப்பிய அன்புமணி ராமதாஸ்!

Halley karthi

“ஒளிப்பதிவு திருத்தச்சட்டத்தின் விளைவுகள் மோசமாக இருக்கும்”: கமல் ஹாசன்

Vandhana