முக்கியச் செய்திகள் குற்றம்

பாலியல் தொல்லை வழக்கு: ஆசிரியர் ராஜகோபால் மீதான குண்டர் சட்டம் ரத்து

மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சென்னை கே.கே.நகரில் உள்ள பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார். இந்நிலையில், தனது கணவரை விடுதலை செய்யக் கோரி, ராஜகோபாலனின் மனைவி சுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

அதில், கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக தனது கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அப்போது ஆன்லைன் வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் சுதா குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

சம்பவம் நடைபெற்ற போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெறவில்லை என்பதை கருத்தில் கொள்ளாமல், குண்டர் சட்டத்தின் கீழ் ராஜகோபாலன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. மேலும், குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பதற்கான காரணங்களை, குறித்த காலத்தில் வழங்கவில்லை என்றும் கூறி, ராஜகோபாலன் சிறையிலடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

Advertisement:
SHARE

Related posts

டிராஃபிக் ராமசாமி மருத்துவமனையில் அனுமதி!

Halley Karthik

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றார் நோவக் ஜோகோவிச்!

இந்தியாவில் ஒரே நாளில் 12,428 பேருக்கு கொரோனா

Halley Karthik