திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய கோயிலில் 7ம் நாள் மாசித் திருவிழா நடைபெற்றது. .
அறுபடை வீடுகளில் , இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய
சுவாமி கோவிலில் , நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது மாசி
திருவிழா. இந்த ஆண்டு மாசி திருவிழா, கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி
கொடியேற்றத்துடன் தொடங்கி , வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த
திருவிழாவின் 7-வது திருநாள் நடைபெற்றது.
கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து,
1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும்
நடந்தது. மேலும், அதிகாலை 5.30 மணிக்கு சண்முகருக்கு உருகு சட்ட சேவை நடைபெற்றது. இதனையடுத்து, சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் சண்முக விலாஸ் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சண்முகர் , வள்ளி தெய்வானையுடன் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், பிள்ளையன் கட்டளை மண்டபம் சென்றடைந்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கு.பாலமுருகன்