சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீடிக்கிறது

ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தலையடுத்து சர்வதேச விமான போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏறத்தாழ 20 மாதங்களுக்கு பின்னர் சர்வதேச விமான போக்குவரத்து டிச.15 முதல் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட…

ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தலையடுத்து சர்வதேச விமான போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏறத்தாழ 20 மாதங்களுக்கு பின்னர் சர்வதேச விமான போக்குவரத்து டிச.15 முதல் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்த முடிவு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இந்நிலையில் தற்போது தொற்று பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மெள்ள மீண்டும் நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று புதிய அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்புகளை கட்டுப்படுத்த ஏற்கெனவே டிச.15 தொடங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போகும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், அதே நேரம் விமான முனையங்களில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/DGCAIndia/status/1465969745287528458

தற்போதைய நிலையில், ஓமிக்ரான் தொற்று பாதிப்பின் சூழல் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சூழலை பொறுத்து சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் இயக்குவது தொடர்பான சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.