கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர்
செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் “இளந்தளிர் பைனான்ஸ்”
அலுவலகம் மற்றும் அம்பாள் நகரில் உள்ள அவரது வீடு ஆகிய இரண்டு இடங்களில்
ஆகஸ்ட் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கரூரில் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு!
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் புதிய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை 7 மணி நேரத்திற்கு பின் முடிவுக்கு வந்தது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள…
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் புதிய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை 7 மணி நேரத்திற்கு பின் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் அவரது மனைவி பெயரில் கட்டி வரும் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் 8 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பிற்பகல் சுமார் 12 மணிக்கு மேல் தொடங்கிய சோதனை இரவு 7 மணி வரை நடைபெற்றது. பின்னர் 7 மணி நேர சோதனைக்கு பின் அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
போக்குவரத்துத்துறை பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்தில் 3-வது நாளாக இன்று விசாரணை நடத்திய நிலையில் .கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.






