விரைவில்…. ஜென்டில்மேன் 2 – மோஷன் போஸ்டர் வெளியிட்ட படக்குழு!

ஜென்டில்மேன் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகும் நிலையில், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து மோஷன் போஸ்டரை படக்குழு இன்று மாலை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு, அர்ஜுன்…

ஜென்டில்மேன் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகும் நிலையில், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து மோஷன் போஸ்டரை படக்குழு இன்று மாலை வெளியிட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு, அர்ஜுன் – மதுபாலா நடிப்பில் வெளியாகி சூப்பர் – டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘ஜென்டில்மேன்’.  இப்படம் வெளியாகி சுமார் 30 வருடங்கள் கழித்து தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் ‘ஜென்டில்மேன் ‘ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது குறித்து அதிகார பூர்வமாக அறிவித்தார்.

இந்த இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஏ.கோகுல் கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளதாகவும், எம்.எம்.கீரவாணி இசையமைப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதேபோல், சேத்தன் சீனு நாயகனாகவும் நயன்தாரா சக்கரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் நாயகிகளாகவும் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.