“திமுகவின் உளவாளியாக செங்கோட்டையன் மாறிவிட்டார்” – எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார்.

கச்சேரிமேடு பகுதியில் கோபிசெட்டிபாளையம் அதிமுக வேட்பாளர் பிரபுவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்யவர, “அதிமுகவை விட்டு வெளியேறியவர்கள் அனைவரும் திமுக பி டீம். செங்கோட்டையனுக்கு அடையாளம் கொடுத்தது பொதுமக்கள் தான். விவசாயிகள் மீது அக்கறையில்லாத அரசு திமுக அரசு. அதிமுக என்பது தொண்டர்களின் கட்சி. எம்எல்ஏக்கள் தான் என்னை முதலமைச்சராக்கினர். எடப்பாடி தொகுதியில் 11-வது முறையாக நிற்கிறேன். 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்தேன்.

அதிமுக வேட்பாளர் அமைதியானவர். அன்பானவர். இதற்கு முன்பு இருந்த எம்.எல்.ஏ. போன்று திமிரு பிடிச்சவர் இல்லை. செங்கோட்டையன் இங்குள்ள நிர்வாகிகளை சந்திக்க விட மாட்டார். ஏராளமானவர்களை கட்சியிலிருந்து வெளியே அனுப்பிவிட்டார். அத்திக்கடவு அவிநாசி திட்டம் இப்பகுதி மக்களின் 65 ஆண்டு கால திட்டமாகும். அதற்கு அப்போதைய மாநில அரசு, அதாவது எனது தலைமையிலான அரசு 1652 கோடி நிதி ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்றினோம். ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்றினோம். திட்டத்திற்கு நான் அடிக்கல் நாட்டினேன். கொரோனா காலத்தால் சிறிது தடைபட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுகவினர் திட்டத்தை திறந்து வைத்தனர். நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைத்து சென்று விட்டார்.

கோவையில் நடந்த விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. ஒரு எம்.எல்.ஏ.வாக இருக்கும் நபர் பங்கேற்கவில்லை. அப்படிப்பட்ட ஆள் தேவையா. செங்கோட்டையன் பள்ளி விழாவில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும்போது கருணாநிதி, ஸ்டாலின் படம் வைத்திருந்தார். அப்போதே அவர் திமுக பி டீமிற்கு சென்று விட்டார். திமுகவின் உளவாளியாக மாறிவிட்டார். அதிமுகவை குழி தோண்டி புதைக்கும் உளவாளியாக இருந்தவர். சட்டமன்றத்தில் திமுகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. இவர் மன்னிக்க முடியாத ஆள். தற்போது சட்டமன்ற தேர்தலில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.