முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

ராஜ் குந்த்ராவின் ஆபாசப் பட விவகாரம்.. பிரபல தமிழ் நடிகை விளக்கம்!

தனக்கும் ராஜ் குந்த்ராவின் ஆபாசப் பட விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழ் நடிகை ஒருவர் மறுத்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, தமிழிலும் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆபாசப் படங்களை தயாரித்து விற்றது தொடர்பாக, ராஜ் குந்த்ரா சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.

ஆபாசப் படங்களை தயாரித்து விற்பனை செய்தது, அதற்காக ஹாட்ஷாட் என்ற தனி செயலியை உருவாக்கியதில் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருந்ததாக மும்பை போலீசார் அவரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை எடுக்கவில்லை என்றும் பாலியல் கிளர்ச்சியூட்டக் கூடிய படங்களை மட்டுமே எடுத்தார் என்றும் தெரிவித்தார். அப்போது கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்நிலையில் ராஜ்குந்த்ராவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ராஜ் குந்த்ராவுடன் தொடர்பில் இருந்ததாக, சில நடிகைகள் பற்றிய தகவல் கள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில் ராஜ்குந்த்ராவின் ஆபாசப் பட விவகாரத் தில், தமிழ் நடிகை புளோரா (ஆஷா சைனி), இந்தி நடிகை செலினா ஜெட்லி உட்பட பல நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் தனக்கும் ராஜ் குந்த்ராவுக்கும் எந்த தொடர்பு இல்லை என்று நடிகை புளோரா மறுத்துள்ளார். இவர் தமிழில், கஜேந்திரா, குஸ்தி, குசேலன் உட்பட பல படங்களில் நடித் துள்ளார். இப்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள புளோரா, ராஜ் குந்த்ராவின் ஆப்-பிற்காக, தான் எந்த புராஜக்டிலும் பங்கேற்கவில்லை என்றும் தேவையில்லாமல் தனது பெயரை சிலர் இந்த விவகாரத்தில் தொடர்பு படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தி நடிகை ஜெலினா ஜெட்லியும்  ராஜ்குந்த்ரா விவாகரத்தில் தனக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கோயம்பேட்டில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை!

Gayathri Venkatesan

5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

Halley karthi

மக்கள் சார்ந்த வளர்ச்சியே மாநில வளர்ச்சியின் கொள்கையாக இருக்க வேண்டும்: பேராசிரியர் ஜெயரஞ்சன்

Halley karthi