“மோடியை வீட்டிற்கு அனுப்புவது உறுதி” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

மோடியை வீட்டிற்கு அனுப்புவது உறுதி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் தமிழகத்தில் தொடங்க இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.  வேட்பாளர்கள் வேட்பு…

மோடியை வீட்டிற்கு அனுப்புவது உறுதி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் தமிழகத்தில் தொடங்க இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.  வேட்பாளர்கள் வேட்பு மனு நிறைவடைந்த நிலையில், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.  அந்தவகையில்,  திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து இளைஞர் நலன்
மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

மீண்டும் மோடி வரக்கூடாது என கூற எடப்பாடி பழனிச்சாமிக்கு தைரியம் இருக்கிறதா? திருவள்ளூருக்குச் சிறந்த வேட்பாளரை அறிவித்த சோனியா காந்தி,  ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும்.  மோடியை வீட்டிற்கு அனுப்புவது உறுதி. பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.