விமானத்தில் பர்ஸை தொலைத்த செல்வராகவன்.. 15 நிமிடத்தில் ஏர் இந்தியா செய்த சம்பவம்..!

மதுரையில் இருந்து சென்னை செல்லும் போது ஏர் இந்தியா விமானத்தில் பணப்பையை தொலைந்த 15 நிமிடத்தில் கண்டுபிடித்து கொடுத்த ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு இயக்குனர் செல்வராகவன் நன்றி தெரிவித்துள்ளார். மதுரையில் இருந்து தனது சொந்த…

மதுரையில் இருந்து சென்னை செல்லும் போது ஏர் இந்தியா விமானத்தில் பணப்பையை தொலைந்த 15 நிமிடத்தில் கண்டுபிடித்து கொடுத்த ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு இயக்குனர் செல்வராகவன் நன்றி தெரிவித்துள்ளார்.

மதுரையில் இருந்து தனது சொந்த வேலைக்காக வந்திருந்த திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் செல்வராகவன் ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். இதன் பின்னர் அவர் வைத்திருந்த பணப்பை தொலைந்தது. விமானத்தில் தொலைந்த தனது பணப்பையை இயக்குனர் செல்வராகவன் தேடி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து 15 நிமிடத்திற்குள் ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. தங்களுடைய பணப்பை எங்களிடம் இருக்கிறது என்றும் இதை வந்து சேகரித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளனர்.

பணப்பையை ஏர் இந்தியா நிர்வாகிகளிடம் பெற்றுக்கொண்ட செல்வராகவன் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நன்றி கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “இன்று மதுரையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் எனது பணப்பையை தவறவிட்டேன். பதினைந்து நிமிடங்களில் ஏர் இந்தியா நிறுவனம் எனக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். நான் பணப்பையை சேகரித்தேன். ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மிக்க நன்றி!” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து உடனடியாக ஏர் இந்தியா நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அந்த பதிவில், “எங்கள் ஊழியர்கள் உங்களுக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் உதவியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் பணப்பையை உங்களிடம் மீண்டும் இணைத்ததில் மகிழ்ச்சி. நாங்கள் நிச்சயமாக உங்கள் வார்த்தைகளை எங்கள் குழுவிற்கு தெரிவிப்போம். விரைவில் உங்களுடன் வானத்தைப் பகிர்ந்துகொள்வோம் என்று நம்புகிறோம்..” என்று இயக்குனர் செல்வராகவனுக்கு நன்றி கூறி ஏர் இந்தியா விமானம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.