சீர்காழியில் தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு பெயர் சூட்டி வழிபாடு!

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு திருமுறை ஈன்ற தெய்வத்தமிழ்மண் என பெயர் சூட்டி மக்கள் வழிபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோவிலில் கடந்த 16 ஆம் தேதி குடமுழுக்குப்…

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு திருமுறை ஈன்ற தெய்வத்தமிழ்மண் என பெயர் சூட்டி மக்கள் வழிபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோவிலில் கடந்த 16 ஆம் தேதி குடமுழுக்குப் பணிகளுக்கு யாகசாலை அமைக்க குழி தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள், 462 தேவார செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கிடைக்க பெற்றது. இவை சட்டை நாதர் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் செப்பேடுகள் கிடைத்த இடத்திற்கு திருமுறை ஈன்ற தெய்வத்தமிழ்மண் என தருமபுரம் ஆதீனம் பெயர் சூட்டினார். இதை தொடர்ந்து அந்த பகுதியில் பெயர் பலகை வைக்கப்பட்டு கிடைக்கப் பெற்ற செப்பேடுகள் பேரனாக அச்சடிக்கப்பட்டு மக்கள் வழிபாடு செய்தனர்.

—கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.