ட்விட்டரில் புதிய கணக்கு தொடங்கிய சீமான்.. முதல் பதிவில் முதலமைச்சருக்கு நன்றி…

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், புதிய கணக்கு தொடங்கிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது…

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், புதிய கணக்கு தொடங்கிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். சீமானுக்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

https://twitter.com/mkstalin/status/1664117137311670273?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1664117137311670273%7Ctwgr%5E230d1154244e6f107a34e0e5dd2f4626e5211dc0%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fstatic.asianetnews.com%2Ftwitter-iframe%2Fshow.html%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2Fmkstalin%2Fstatus%2F1664117137311670273%3Fref_src%3Dtwsrc5Etfw

இவர்கள் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்தது. இந்த நிலையில் செந்தமிழன் சீமான் (@NTKSeeman4TN) என்ற பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு ஒன்றை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கி உள்ளார்.

https://twitter.com/NTKSeeman4TN/status/1664183647845621760

மேலும் தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என பதிவிட்டு அவரை டேக் செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.