நீலகிரியில் ஆஸ்திரிலிய பெண் சபாநாயகருக்கு உற்சாக வரவேற்பு!

நீலகிரி மாவட்டம், கன்னேறி பகுதியில் உள்ள முதல் மாவட்ட ஆட்சியர்  ‘ஜான் சலிவனின்’ திரு உருவ சிலைக்கு, ஆஸ்திரிலிய பெண் சபாநாயகர் மாலை அணிவித்தார். நீலகிரி மாவட்டம், கண்ணேறி முக்கு பகுதிக்கு மேற்கு ஆஸ்திரேலிய…

நீலகிரி மாவட்டம், கன்னேறி பகுதியில் உள்ள முதல் மாவட்ட ஆட்சியர்  ‘ஜான் சலிவனின்’ திரு உருவ சிலைக்கு, ஆஸ்திரிலிய பெண் சபாநாயகர் மாலை அணிவித்தார்.

நீலகிரி மாவட்டம், கண்ணேறி முக்கு பகுதிக்கு மேற்கு ஆஸ்திரேலிய சபாநாயகர் மைக்கில் ராபர்ட்ஸ்,  சட்டமன்ற உறுப்பினர்கள் டேவிட் ஹனி,  டேவிட் மற்றும் இந்திய வம்சாவளி ஆஸ்திரேலியா சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் வருகை தந்தனர். இவர்கள், தமிழ்நாடு மற்றும்
ஆஸ்திரேலிய இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வந்துள்ளனர்.
மேலும், கண்னேறி முக்கு பகுதிக்கு வருகை தந்த போது, படுகர் இன மக்கள் ஆடல்
பாடலுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும், நவீன நீலகிரியை உருவாக்கியதோடு, தேயிலை தோட்டங்கள் மற்றும்
உதகை படகு இல்லத்தை உருவாக்கிய, நீலகிரி மாவட்டத்தின் முதல் மாவட்ட
ஆட்சியர் ‘ஜான் சலிவனின்’ திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினர் . பின்னர், நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர்
ஜான் சலிவனின் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.

பின்பு, நீலகிரி மாவட்ட படுகர் இன மக்களோடு பராம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர் .
மேலும், ஆஸ்திரேலியா பிரதிநிதிகள் , சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெகதீஷ்
வீட்டிற்கு சென்று அவர் பெற்றோர்களிடம் ஆசிப்பெற்றனர். தொடர்ந்து,
நீலகிரி மாவட்ட மக்களின் கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்த புத்தகங்கள்,
அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

—கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.