திமுகவின் சாதனை ஒருபக்க விளம்பரம் – சீமான் தாக்கு

திமுகவின் ஓராண்டு சாதனை என்பது ஒரு பக்கம் விளம்பரம் என்ற ஒற்றை வரியில் கூறலாம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டு பெருங்குடியில் நாம் தமிழர் கட்சிக்…

திமுகவின் ஓராண்டு சாதனை என்பது ஒரு பக்கம் விளம்பரம் என்ற ஒற்றை வரியில்
கூறலாம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு பெருங்குடியில் நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் பேசியபோது, பிடல்
காஸ்ட்ரோ, சேகுவேரா ஆகியோரின் கருத்துக்களை கூறி இளைஞர்களுக்கு உணர்ச்சியை
தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
சீமான் சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. அன்பும் பாசமும் அதே அளவு இருந்தாலும் 10 மணி நேரம் கரண்ட் இல்லை என கூறினார்.

மற்ற மாநிலங்களைவிட அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதாகவும், உண்மையைச் சொன்னால் கோவித்துக் கொள்ளாமல் அதற்கான பதிலை அமைச்சர் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

பட்டினப் பிரவேசம் தொடர்பான கேள்விக்கு, இத்தனை அறிவியல் வளர்ச்சிக்குப் பிறகு பல்லாக்கு தூக்குவதற்கு ஆதினமே வேண்டாம் என சொல்லியிருக்க வேண்டும். முதல் நாள் ஒன்றை சொல்லிவிட்டு அடுத்தநாள் ஒன்றைக் கூறுவதுதான் திராவிடம்.

இந்தி பேசினால் நல்லவர்கள் என சுகாஷினி சொல்கிறார். அப்படியானால் இந்தி
பேசாதவர்கள் கெட்டவர்களா ? என கேள்வி எழுப்பிய சீமான், தேவைப்பட்டால்
பிற மொழிகளைப் படிக்கலாம். ஆனால் கட்டாயம் படிச்சு ஆக வேண்டும் என்பது
தான் சரியல்ல என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.