டோக்கியோ பாராலிம்பிக்ஸ்; இந்திய வீரர் பதக்கம் திரும்ப பெறப்பட்டது

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்திய வீரர் வினோத் குமார் வென்ற பதக்கம் திரும்ப பெறப்பட்டது ஒலிம்பிக்ஸ் போட்டிகளை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில்…

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்திய வீரர் வினோத் குமார் வென்ற பதக்கம் திரும்ப பெறப்பட்டது

ஒலிம்பிக்ஸ் போட்டிகளை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற போட்டியில், ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் அசத்தினர்.

முன்னாதாக நேற்று நடைபெற்ற வட்டு எறிதல் எப்52 பிரிவில் இந்திய வீரர் வினோத்குமார் 19.91 மீட்டர் தூரம் வட்டு எறிந்து வெண்கலப்பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று இரவு முடிவை நிறுத்தி வைப்பதாக ஒலிம்பிக்ஸ் குழு அறிவித்தது. இந்நிலையில், தொழில்நுட்பக்குழுவினரின் முடிவின் அடிப்படையில் வினோத் குமாரின் பதக்கம் திரும்பபெறப்பட்டது. வட்டு எறிதல் எப்52 பிரிவில் பங்கேற்க வினோத்குமார் தகுதியற்றவர் என தொழில்நுட்பக்குழுவினர் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.