அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், 2026 சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி வந்துள்ளார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.








