விவசாயிகளின் ரயில் மறியலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!

விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தை முன்னிட்டு பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் விவசாய…

விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தை முன்னிட்டு பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் டெல்லி எல்லையில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

85ஆவது நாளாக இன்று பேராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என கிசான் அந்தோலன் கமிட்டி அறிவித்துள்ளது.

இதனால் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி எல்லையான காஜிப்பூர், சிங்கு, டிக்ரி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் பகுதிகளிலும் 20 ஆயிரத்துக்கும் மேல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பிகார் மாநிலம் பட்னா ரயில் நிலையத்தில் வேளான் சட்டங்களுக்கு எதிராக அம்மாநிலத்தின் ஜன் ஆதிக்கர் கட்சி ரயில் மறியிலில் ஈடுபட்டுள்ளது. ஹரியானா மாநிலம் பல்வால் ரயில் நிலையத்தில் விவசாயிகள் போராட்டம் காராணமாக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.