ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் தமிழகம்

சனாதனத்திற்கு எதிராக மதச்சார்பற்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் – முத்தரசன்

சனாதனத்திற்கு ஆதரவாக செயல்படும் ஆர் எஸ் எஸ் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்றவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

எழுத்தாளர் ஜீவாவின் 115 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முத்தரசன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜீவா அவர்கள் எந்த சனாதனத்தை எதிர்த்து போராடினார்களோ இன்று அந்த சனாதனம் தலைதூக்கி உள்ளது. ஒரு குழு அமைத்து தேசத்தின் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக புதிய அரசியலமைப்பின் சட்டத்தை உருவாக்கும் முயற்சியில் முதல் பாகம் வெளியிடப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில் தற்போது 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் எட்டு கோடி தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. அது இந்த புதிய அரசியலமைப்பு சட்டத்தின் படி தேசிய கொடி அகற்றப்பட்டு, காவி கொடியாக பறக்கப்படும். அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு, மனுதர்மம் அரசயலமைப்பு சட்டமாக நிறைவேற்றப்படும். இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் வாழலாம் ஆனால் வாக்குரிமை இல்லை என இந்த புதிய அரசியலமைப்பின் முதல் பாகத்தில் கூறப்பட்டுள்ளது. அடுத்த பாகத்தில் மக்கள் விரோத விஷயங்களை என்ன சேர்ப்பார்கள் என்பது தெரியவில்லை.இந்த அபாயகரமான சூழலில் சனாதனத்திற்கு எதிராக உள்ளவர்கள் ஒன்றிணைந்து, சனாதனத்திற்கு ஆதரவாக இருக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவிற்கும் எதிராக போராட வேண்டும்.

மத்திய இணை உள்துறை அமைச்சர் முரளிதரன் சாவர்க்கர் குறித்து தமிழக தலைவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்,சாவர்க்கர் தலைசிறந்த விடுதலை போராட்ட வீரர் எனக் கூறியுள்ளார். வரலாற்றை முரளிதரன் மட்டுமின்றி மோடி மற்றும் பாஜகவினர் படிக்க வேண்டும். விடுதலை போராட்ட காலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கம் இருந்தது.

1920 களில் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் இருவர் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்னர். அந்த இருவரில் ஒருவர் வாஜ்பாய் மற்றொருவர் சாவர்க்கர் இந்த இருவருமே விடுதலைப் போராட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு வெளியே வந்தவர்கள். அது மட்டுமல்ல காந்தியை கொலை செய்த பட்டியலில் சாவர்க்கர் பெயரும் இடம் பெற்றுள்ளது என்பதை முரளிதரன் வரலாற்றைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Web Editor

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

Web Editor

ரூட்டு தல பிரச்சனை; மாநில கல்லூரி மாணவர்களிடையே மோதல்

EZHILARASAN D