பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிப்பதற்கு மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று சிபிஐ தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜா பேசுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டும். பாஜகவை தோற்கடிக்க ஒன்றுபட்டு போராட வேண்டும். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அது பாஜகவிற்கு சாதகமாகிவிடும் என்று தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து பேசிய டி.ராஜா, இந்தியாவில் மதச்சார்பற்ற கட்சிகள் முதிர்ச்சி பெற்ற கட்சிகள்தான். ஆகவே தேசிய அளவில் மூன்றாவது அணி தேவையில்லை. மதசார்பற்ற அணிகள் ஒரே அணியில் திரள வேண்டும் என தெரிவித்தார்.
அண்மைச் செய்தி : சந்தோஷத்தையும், கவலையையும் அனுபவித்து ஏற்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- கமல்ஹாசன்
மணீஷ் சிசோடியா கைது குறித்து பேசிய டி.ராஜா, டெல்லி துணை முதல்வர் கைது கண்டனத்திற்குரியது, அரசின் அமைப்புகளை கொண்டு எதிர்கட்சிகளை அச்சுறுத்தும் வேலையில் பாஜக செயல்பட்டு வருகிறது அதை முறியடிக்க வேண்டும் என கூறினார்.







