சித்தார்த், அதிதி இருவரும் இணைந்து நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்தார்த். நடிகராக மட்டுமின்றி மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
பாய்ஸ் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்த சித்தார்த் தமிழின் கவனிக்கத்தக்க நடிகர் ஆனார். தமிழ் மட்டுமின்றி டோலிவுட்,பாலிவுட்டிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு வெளியான மகா சமுத்திரம் படத்தில் சித்தார்த்தும், அதிதி ராவும் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியிருப்பதாகக் கூறப்படுகிறது.
பலமுறை இருவரும் வெளியில் செல்வதாகக் கூறப்பட்டு வந்தாலும், சித்தார்த்தும், அதிதி தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில், சித்தார்த்தும், அதிதி இருவரும் இணைந்து நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பலரும் இந்த வீடியோவை விரும்பி பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.







