முக்கியச் செய்திகள் தமிழகம்

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

ஊதியம் தொடர்பாக போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஊதியம் தொடர்பான இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை அரசின் நிதி நிலையுடன் தொடர்புடையது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேர்தல் அறிக்கைகளை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அதுபோல் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும்.

கொரோனா பரவல் தொடர்பாக தமிழக அரசும் சுகாதாரத்துறையும் கொடுக்கும் அறிவுறுத்தலின்படி பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது. வரும் கல்வியாண்டில், பாடத்திட்டங்களில் திருக்குறள் அதிகமாக இடம்பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உலக கோப்பை ஹாக்கி 2023; அட்டவணை வெளியீடு

G SaravanaKumar

ரூ. 94 ஆயிரம் பில்: கூலி தொழிலாளிக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்

Web Editor

இந்தியாவில் 27,254 பேருக்கு கொரோனா பாதிப்பு

EZHILARASAN D