பிப். 14ம் தேதியில் நீட் தேர்வுக்கான இரண்டாம் சுற்று கவுன்சிலிங்

நீட் தேர்வுக்கான இரண்டாம் சுற்று கவுன்சிலிங் வரும் 14ம் தேதி நடைபெறும் என மருத்துவ ஆலோசனை குழு அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி…

நீட் தேர்வுக்கான இரண்டாம் சுற்று கவுன்சிலிங் வரும் 14ம் தேதி நடைபெறும் என மருத்துவ ஆலோசனை குழு அறிவித்துள்ளது.

2021ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் அதே ஆண்டில் நவம்பர் மாதம் வெளியானது. இந்த நிலையில் முதற்கட்ட ஆலோசனைக் குழு நடந்து முடிந்துள்ள சூழலில் இதற்கான இரண்டாம் சுற்று கவுன்சிலிங் தேதியை மருத்துவ ஆலோசனை குழுமம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவ ஆலோசனை குழு வெளியிட்ட அறிக்கையில், 2021 நீட் தேர்வு எழுதியோருக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் பிப் 14ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கான தகவல்களை மருத்துவ ஆலோசனை குழுமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு வரை நீட் தேர்வுக்கான ஆலோசனை சுற்று இரண்டாக இருந்துவந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் இந்த கவுன்சிலிங் சுற்று 4 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.