வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய சீமான்!

சட்டப்பேரவைத் தேர்தலில் 36 தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளுக்கும் தம் கட்சியின் சார்பில் போட்டியிடும்…

சட்டப்பேரவைத் தேர்தலில் 36 தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளுக்கும் தம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஏற்கனவே தேர்வு செய்து விட்டார். வேட்பாளர்களில் 117 பேர் பெண்களும் 117 பேர் ஆண்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சை திருச்சி திருவாரூர் உள்ளிட்ட 36 தொகுதிக்களுகான வேட்பாளர்களுடன் தஞ்சாவூரில் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்கள் கொல்லப்படவில்லை என பிஜேபி தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். இப்போது இலங்கை கடற்படையால் மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். கேரள மீனவர்கள் சுடப்பட்ட போது இத்தாலி வீரர்களை உடனடியாக கைது செய்த கேரள அரசு 2 கோடி அபராதம் விதித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். அது போன்ற அரசியல் சூழ் நிலை தமிழகத்தில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சசிகலா பூரண குணமடைய வாழ்த்துத் தெரிவிப்பதாகவும் சீமான் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply