முக்கியச் செய்திகள் தமிழகம்

யானையை தீ வைத்து கொன்ற, நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி!

கூடலூர் அருகே யானை உயிரிழந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக யானையின் காதில் மர்ம நபர்கள் தீவைத்த, நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள மசினகுடி பகுதியில் காயங்களுடன் சுற்றித் திரிந்த ஒற்றை ஆண் காட்டு யானை, காதில் ரத்தம் சொட்ட சொட்ட பரிதாபமாக உயிரிழந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில், யானை மீது மர்ம நபர்கள் தீ வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து, யானைக்கு தீவைத்து கொடுமைப்படுத்தியவர்கள் குறித்து தனிப்படை அமைத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், மசினகுடி பகுதியில், மூன்று பேர் டயரில் தீயை பற்றவைத்து, யானையின் காதில் வீசிய வீடியோ வெளியாகியுள்ளது. காதில் தீப்பற்றி எரிந்த நிலையில், காட்டு யானை ஓலமிடும் நெஞ்சை பதறவைக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய வனத்துறையினர், தீ வைத்து யானையின் இறப்பிற்கு காரணமாக இருந்த மூவரில் 2 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

ராகுல்காந்தியின் வருகை காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை எற்படுத்தியுள்ளது; எம்.எல்.ஏ விஜயதரணி கருத்து!

Saravana

மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை

Halley Karthik

பெண்களை ஈவ் டீசிங் செய்த இளைஞர்: தட்டிக்கேட்ட நபருக்கு கத்திக்குத்து!

Jayapriya

Leave a Reply