தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலையை சூழ்ந்த கடல் நீர் | சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

தனுஷ்கோடி அரிச்சல்முனையில் கடல் சீற்றம் திடீரென அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தனுஷ்கோடி தென் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. …

தனுஷ்கோடி அரிச்சல்முனையில் கடல் சீற்றம் திடீரென அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தனுஷ்கோடி தென் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று.  தனுஷ்கோடி அரிச்சல் முனை என்பது நாட்டின் ஓர் நிலப்பரப்பு எல்லையாக இருபுறமும் கடல் சூழ அமைந்திருக்கும் ரம்மியமான இடமாகும்.

நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ராமேசுவரம் வருகிறவர்கள், அப்படியே தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை வாகனங்களில் சென்று கடல் அழகை பார்த்து ரசிக்கின்றனர்.  ஆனால்,  தனுஷ்கோடி கடலின் தன்மை என்பது எப்போதும் சீற்றம் கொண்டதாகும்.

இந்நிலையில், தனுஷ்கோடியில் வரலாறு காணாத கடல் சீற்றம் காரணமாக 20 அடிக்கு மேல் அலைகள் எழுகின்றன.  இதனால் அரிச்சல்முனை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  தடுப்புகளைத் தாண்டி நெடுஞ்சாலைக்கு கடல் நீர் வருவதால் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.