இலங்கைக்கு கடத்த இருந்த 13 லட்சம் மதிப்பிலான கடல் அட்டை பறிமுதல்

மண்டபம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்த இருந்த 13 லட்சம் மதிப்பிலான 1100 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கடல்…

மண்டபம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்த இருந்த 13 லட்சம் மதிப்பிலான 1100 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் தலைமையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறை இலங்கைக்குக் கடத்துவதற்காகத் தயாராகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1100 கிலோ கடல் அட்டையைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தின் உரிமையாளர்களிடம் விசாரணையில் ஈடுபடவும் காவல்துறை திட்டமிட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு 13 லட்சம் இருப்பதோடு கடல் அட்டையை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.