“மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டத்திற்கு வரவேற்பில்லை” – அமைச்சர் பெரியகருப்பன்

மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்திற்கு போதிய வரவேற்பில்லை என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள்…

மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்திற்கு போதிய வரவேற்பில்லை என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து பேசினார்.

அப்போது பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் குறித்து நிதிநிலை அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை எனவும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதன் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருவதாகவும் கூறினார்.

மேலும் கடந்த ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மானிய விலையில் இருசக்கர வாகன திட்டத்திற்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என்றும் இது தொடர்பாக எந்த ஒரு கோரிக்கை மனுவும் பெறப்படவில்லை என்றும் அமைச்சர் பெரியகருப்பன் பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.