முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் கடற்கரையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், வருகிற 27-ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

’தடுப்பூசி போட்ட சர்டிபிகேட் இருக்கா?’ அப்ப காபி ஒரு ரூபாய்தான்!

Gayathri Venkatesan

தொகுதியில் வெற்றிவாய்ப்பு அதிகளவில் உள்ளது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Jeba Arul Robinson

டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Gayathri Venkatesan