கோவை மாணவி உயிரிழப்பு வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை வரும் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
https://twitter.com/news7tamil/status/1459918099956711427
கோவையில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி உயிரிழப்பு செய்துகொண்ட சம்பவத்தில் பெங்களூரில் பதுங்கியிருந்த சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கோவை அழைத்து வரப்பட்ட மீரா ஜாக்சனிடம் ஆர்.எஸ். புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து கோவை மாநகர துணை ஆணையர்கள் ஜெயச்சந்திரன், உமா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து மாவட்ட மகிளா நீதிமன்ற பொறுப்பு நீதிபதி நந்தினி முன்பு மீரா ஜாக்சனை போலீசார் ஆஜர்படுத்தினர். மீரா ஜாக்சனை வரும் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்







