பள்ளி மேலாண்மைக் குழு ( SMC ) மறுகட்டமைப்புக் கூட்டம் தேதி மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டம் ஜூலை 2ஆம் தேதிக்கு பதில் ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஜூலை 2ஆம் தேதி TNPSC நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய தேர்வுகள் நடைபெறுவதால், SMC மறுகட்டமைப்புக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜூலை 9ஆம் தேதி எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல், SMC மறுகட்டமைப்பு கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
-ம.பவித்ரா







