டிஜிட்டல் காலத்தில்தான் அதிகமான புத்தகங்கள் வாசிக்கப்பட வேண்டும் – எம்.பி. சு.வெங்கடேசன்

டிஜிட்டல் காலத்தில்தான் அதிகமான புத்தகங்கள் வாசிக்கப்பட வேண்டும், மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்படுவது மகத்தான சாதனை என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரை மேலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் திட்ட…

டிஜிட்டல் காலத்தில்தான் அதிகமான புத்தகங்கள் வாசிக்கப்பட வேண்டும், மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்படுவது மகத்தான சாதனை என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரை மேலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வருகின்றார்.

அப்போது அவர் செய்தியளார்களிடம் பேசுகையில், இந்த ஆய்வு என்பது வெறுமென வாக்கு சேகரிப்பதோ, நன்றி தெரிவிப்பது போல் அல்லாமல் உளப்பூர்வாக ஊராட்சிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசுத் துறை அதிகாரிகளும், நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக குழுவினரும் குறிப்பெடுத்து அறிக்கை தயாரிக்கின்றனர்.

தற்போதைய டிஜிட்டல் காலத்தில்தான் புத்தகங்கள் அதிகம் வாசிக்கப்பட வேண்டும். எவ்வளவு பழக்கவழக்கங்கள் மாறினாலும் இன்னும் கண்ணாடி பார்த்து தான் தலை சீவுகின்றோம் அதுபோல தான் வாசிப்பும். மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்படுவது மகத்தான சாதனை என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.