முக்கியச் செய்திகள் தமிழகம்

வடமாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் – ராமதாஸ் யோசனை

பொதுதேர்வு தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கியிருக்கும் மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் தமிழகத்தின் வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்து இருக்கிறது. இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ள நிலையில், பத்தாம் வகுப்புக்கான தேர்ச்சி விகிதம் பெருமளவில் குறைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதேபோல், தேர்ச்சி விகிதத்தில் வடக்கு மாவட்டங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் கடைசி இடங்களையே பிடித்திருப்பது கவலையளிக்கிறது.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டமும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டமும் முதலிடம் பிடித்துள்ளன. அந்த மாவட்டங்களுக்கும், தேர்ச்சியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்ச்சி பெற இயலாத மாணவர்கள் அதை எண்ணி கவலை கொள்ளாமல், அடுத்து வரும் துணைத் தேர்வுகளை சிறப்பாக எழுதி வெற்றி பெற்று உயர்கல்வி பயில எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுத்தேர்வு முடிவுகளில் கவலையளிக்கும் அம்சம் வடக்கு மாவட்டங்களும், காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களும் தேர்ச்சி விகிகத்தில் மிகவும் பின்தங்கி இருப்பது தான். இரு தேர்வுகளிலும் வேலூர் மாவட்டம் தான் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது.

கடந்த காலங்களில் கடைசி வரிசையில் இருந்த திருவண்ணாமலை, பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 7-ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. முதல் 3 இடங்களில் வந்த தலைநகர் சென்னை, இப்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 26-ஆவது இடத்திற்கும், 12-ஆம் வகுப்பு தேர்ச்சியில் 18-ஆவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருக்கிறது. எனவே வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமெனில் அங்கு அதிரடியான மாற்றங்களை செய்ய வேண்டும்.

கல்வியில் வட மாவட்டங்கள் பின்தங்கியிருப்பது இப்போது ஏற்பட்ட சிக்கல் அல்ல. காலம் காலமாகவே அந்த மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி தான் உள்ளன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் வலியுறுத்தி வரும் போதிலும் கூட, அதற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்களைச் சேர்ந்த 44 வட்டங்களில் கல்வி வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. எனவே, வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களை கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவித்து, அந்த மாவட்டங்களில் தொடக்கப்பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர், உயர்வகுப்புகளில் பாடத்திற்கு ஓர் ஆசிரியரை நியமித்தல், மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கூறுகளை உள்ளடக்கிய சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

Halley Karthik

அதிமுகவினர் மிரட்டினால் சட்டப்படி நடவடிக்கை; செந்தில் பாலாஜி எச்சரிக்கை

Arivazhagan Chinnasamy

மராத்தா சமூகத்திற்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Halley Karthik