கிராமசபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க உத்தரவு

அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்று, பள்ளி வளர்ச்சி தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர்…

அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்று, பள்ளி வளர்ச்சி தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று
பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ம் தேதி மாநிலம் முழுவதும்
சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று பள்ளிகளின் வளர்ச்சி தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளின் வளர்ச்சி, கற்றல் – கற்பித்தல் போன்றவை தொடர்பாக பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கிராம சபைக் கூட்டத்தில் முன்வைக்க வேண்டும் என்றும், இடைநிற்றல், மாணவர் சேர்க்கை, பள்ளி
உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு தொடர்பாகவும் கிராம சபைக் கூட்டங்களில்
விவாதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கிராம பஞ்சாயத்துகள் பள்ளியின் வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கி, துணை நிற்க
வேண்டும் என்ற அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்று, பள்ளிகளின் வளர்ச்சி தொடர்பாக கிராம பஞ்சாயத்துகளின் ஆலோசனையைப் பெற்று, கிராம சபைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீண்டும் அடுத்த பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.