முக்கியச் செய்திகள் தமிழகம்

நடப்பு கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் விற்பனை துவக்கம்!

நடப்பு கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் விற்பனை இன்று தொடங்கியதை அடுத்து மாணவர்களும், பெற்றோரும் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி சென்றனர்.

நடப்பு கல்வியாண்டுக்கான ( 2021-22 ) பாடப்புத்தகங்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள DPI வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தனியார் பள்ளி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக பாடப்புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

நடப்பு கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்களை சுயநிதி மெட்ரிக் பள்ளிகளின் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

Advertisement:
SHARE

Related posts

“கண்களில் படுவதையெல்லாம் விற்க முனையக் கூடாது” – எம்.பி சு.வெங்கடேசன்

Halley karthi

இதுதான் முதன்முறை: சர்வதேச விண்வெளி மையத்தில் தொடங்கியது ஷூட்டிங்

Halley karthi

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

Halley karthi