மாற்று சக்தி அல்ல, ஏமாற்று சக்தி : தவெக மீது நயினார் சாடல்…!

தவெக ஒரு மாற்று சக்தி அல்ல, ஏமாற்று சக்தி என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுயள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது :

ஆட்சி மாறியதே ஒழிய காட்சி மாறவில்லை. திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் தூய்மைப் பணியாளர் ஒருவரே நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் காணொளி காட்சி, மக்கள் நலனில் அக்கறையில்லாத முந்தைய திமுக ஆட்சியின் நீட்சியே தவெக ஆட்சி என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்த லட்சணத்தில், தனது சொந்தத் துறையில் நிலவும் இதுபோன்ற சீர்கேடுகளைக் களைவதை விடுத்து, தேவையற்ற விஷயங்களில் கருத்து சொல்லி காலத்தை விரயம் செய்து, மக்கள் உயிரோடு விளையாடி வருகிறார் தவெக சுகாதாரத் துறை அமைச்சர் திரு. அருண் ராஜ் அவர்கள். மொத்தத்தில், தவெக ஒரு மாற்று சக்தி அல்ல, ஏமாற்று சக்தி என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேறு தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.